புத்தளம் பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், திருட்டு போன்ற ஒழுக்க சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றது.
இந் நிகழ்வு புத்தளம் பகுதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஹேமசிறி, மற்றும் சமூக பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி அசோக தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இவ்வாறான ஒழுக்க சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடும் எடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ,புத்தளம் நகரபிதா முஹம்மது ரபீக், புத்தளம் நகர எல்லைக்குட்பட்ட பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள், இளைஞர் சமூகம், பிரதேச சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஜனாப் மற்றும் அப்துல் முஜீப் மௌலவி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.