பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம்: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!

Date:

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து பேக்கரி உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறையின்படி, பாண் உட்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளமையால், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலையை அதிகரித்தால் இயல்பாகவே பேக்கரி தொழில் பாதிக்கப்படும்.

எனவே இந்த அனைத்து காரணிகளின் விளைவாக பேக்கரி பொருட்களின் விலை உயர்வை தவிர்க்கமுடியாது.

எனினும் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...