பேருந்து கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானம் இன்று!

Date:

எரிபொருள் விலை திருத்தத்தின் படி பஸ் கட்டணத்தை திருத்த முடியுமா? இல்லை? இது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா, தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் படி, கட்டணங்களை திருத்துவதற்கு எரிபொருளின் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக மாற வேண்டும்.

இதுதொடர்பான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றிரவு ஏற்பட்ட எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ் கட்டணத்தை திருத்தும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பெற்றோல் விலை குறைப்புடன் ஒப்பிடுகையில் வாடகை முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என நிபுணத்துவ முச்சக்கரவண்டி சங்கத்தின் செயலாளர் நிஷாந்த குமார தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...