அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்று முதல் குறைப்பு!

Date:

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய,   ஒரு கிலோ பூண்டின் புதிய விலை 490 ரூபாய், ஒரு கிலோ ரொட்டி மா புதிய விலை 320 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கடவை பருப்புவின்  புதிய விலை 285 ரூபாய், ஒரு கிலோ வெள்ளை சீனியின்  புதிய விலை 260 ரூபாய், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின்   புதிய விலை 169 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

1500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நெத்திலியின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1450 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் அதிக மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று...

டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2025; தமிழ் மொழி மற்றும் இலக்கிய பயணத்தின் புதிய தொடக்கம்

2025 டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கனடாவின் டொரோண்டோ...