அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன!

Date:

சந்தையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், சந்தையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய, பருப்பு கிலோவொன்றின் விலை 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

நாட்டரிசி கிலோவொன்றின் விலை 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும், வெள்ளை பச்சையரிசி கிலோவொன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும்,

சீனி கிலோவொன்றின் விலை 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும், கோதுமை மா கிலோவொன்றின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...