இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன.
இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது. இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர்.
வெற்றி பெற்ற அணியின் ரசிகர்களும், தோல்வி அடைந்த அணியின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.
இந்தப் போட்டியைக் காண மைதானத்தில் அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர்.
அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 2 பேர் பொலிஸ் அதிகாரிகள். 34 பேர் மைதானத்திற்குள் உயிரிழந்தனர், மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கலவரத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறியது நெஞ்சை உருக்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
சுமார் 180 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் அதிக நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
Indonesia- At least 127 people killed, 180 injured in riot at football stadium in #Indonesia – Foreign Media pic.twitter.com/pZAS5paV6j #football
— Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet) October 2, 2022