நாட்டில் உணவு நெருக்கடி நிலவும் இவ்வேளையில், பஃபே முறையில் உணவு விற்பனை செய்யப்படும் இடங்களில் சுமார் 50 வீதமான உணவுக் கழிவுகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் வேளாண் விஞ்ஞானி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார்.
இதன்போது, இதுபோன்ற உணவு வீணாவதை தடுக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு உணவு வீணாவதை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று சர்வதேச உலக உணவு தினத்தை முன்னிட்டே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.