இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...