இலங்கை வருகிறார் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி!

Date:

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ நாளை (19) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுரகம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

அவரது விஜயத்தின்போது இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் குறிப்பாக மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...

QR கொடுப்பனவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

புதிய QR முறை கொடுப்பனவுக்கு அப்பாற் சென்ற கலாசார ரீதியிலான பிணைப்பாக...

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...