உணவின் தரம் குறித்து ஆய்வு: சுகாதார அமைச்சு

Date:

நாட்டு மக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணப் பொருட்களின் தரத்தை நிலைநிறுத்த இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்காக 25 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவு வகைகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாதிரி சேகரிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து கவலைகள் எழுந்த நிலையிலேயே,  பல்வேறு வகையான உணவுகள் குறித்து ஆய்வு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

முழந்தாளிட்டுக் கட்டப்பட்ட குளோபல் சுமுத் புளோட்டிலா ஆர்வலர்கள்: இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இலங்கை கண்டனம்.

காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை...

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்...

இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் கைது

இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்...