புத்தல , பெல்வத்த ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 22 சிறுவர்கள் உணவு விஷம் காரணமாக இன்று (ஒக்டோபர் 5) வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
காலை உணவை உட்கொண்டதன் பின்னர் குழந்தைகளின் தோல் அரிப்பு மற்றும் தோல் வெடிப்பு மற்றும் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.
எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தமக்கு இதுவரை எவ்வித முறைப்பாடும் கிடைக்கப்பெறவில்லையெனவும், இது தொடர்பான ஆரம்ப சுகாதார பரிசோதனைகளை புத்தல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.