இந்த போட்டியை காண கேரளா மாநிலம் மாஹேயை சேர்ந்த நாஜி நௌஷி என்ற ஐந்து குழந்தைகளுக்கு தாயான பெண் தனியாக சாலை மார்க்கமாக கத்தார் செல்ல திட்டமிட்டுள்ளார்.
அதற்காக மஹேந்திரா தார் ஜீப்பை தயார் செய்து பயணத்தை தனியாக தொடங்கியுள்ளார்.
கோயம்புத்தூர் வழியாக மும்பையை அடைந்த பிறகு, அவர் தனது வாகனத்துடன் கப்பல் மூலம் ஓமனில் தரையிறங்குவார்.
அதன் பின்னர் அவர் சாலை வழியாக பயணம் செய்து கத்தாரை ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா வழியாக சென்று அடைவார்.