உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!

Date:

அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆக 50% குறைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஒக்டோபர் 9) காலை தொழில் நிபுணர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த தேர்தலுக்கு முன்னர், உள்ளூராட்சி மன்றங்களுக்கான (பிரதேச சபைகள், மாநகர சபைகள், நகர சபைகள்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 ஆகக் குறைத்து, ஜன சபைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரம் ஒரு தலைவருக்கு பதிலாக தலைவர் அடிப்படையிலான குழுவிற்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் அடுத்த உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் இந்த திருத்தங்களை உள்ளடக்கிய சட்ட வரைவு தயாரிக்கப்படும்” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசியல் ஊழலுக்கு முக்கிய காரணம் விருப்புரிமை முறையே என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , விருப்புரிமையற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு தேர்தல் முறைமையை உடனடியாகக் கடைப்பிடித்து, தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்திற்கு தேர்தல் சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றார்.

இன்று இந்த நாட்டில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பொருளாதாரத்தின் வீழ்ச்சி. மேலும் நாட்டின் பெரும்பான்மையினரால் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு நிராகரிப்பு. இந்தப் பொருளாதாரச் சரிவு அரசியல் அமைப்பினால் ஏற்பட்டது என்று பலர் கூறுகின்றனர்.

பொருளாதாரத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியுள்ளோம். அதைப்பற்றி இங்கு மேலும் பேச விரும்பவில்லை. ஆனால் அரசியல் வேலைத்திட்டத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இன்று இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் அரசியல் அமைப்பு தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் ஆற்றில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனி நபர்களால் அல்ல, அரசியல் அமைப்பை அவர்கள் ஏற்காததால் தான்.

மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டும். கிராம மட்ட அரசியலால் மக்கள் சலிப்படைந்து விட்டதால் இன்று ஒரு புதிய கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். அது அரசாங்கமல்ல முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜன சபை முறையை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதியிலும், அந்த கிராமத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக பணிகளை செய்ய வேண்டும். அதைத்தான் ஜன சபைகள் என்பார்கள். அந்த முறை நல்லதுதான்.

இந்த அமைப்பு முன்பு கிராமோதய மண்டல் என்று இருந்தது. அது அரசாங்கத்துடன் தொடர்புடையது, இது அரசாங்கத்துடன் தொடர்புடையது அல்ல. இந்த பொதுக்கூட்ட திட்டத்தை செயல்படுத்த காத்திருக்கிறோம்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...