ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நேற்று (27), கொழும்பு பௌத்தாலோக மாவத்தை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இந்த சந்திப்பு தூதுவர் டெனிஸ் சைய்பீய் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது. . நாட்டில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூக,பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.