கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Date:

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென மீனவர்கள், கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பிலான அறிவித்தல் ஊடாக வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே 50 தொடக்கம் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதற்கமைய, காலி முதல் கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பிரதேசங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...