அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சமைத்த கறி பாத்திரத்தில் விழுந்து தீக்காயமடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதுடன், விசாரணைக் குழுவொன்று அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
உயிரிழந்தவர் தெரணியகலவைச் சேர்ந்த (62) கொலைக் குற்றத்திற்காக 2001 ஆம் ஆண்டு முதல் 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 2028 ஆம் ஆண்டு அந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த (26)திகதி, மற்றுமொரு கைதியுடன் சேர்ந்து அடுப்பிலிருந்து சமைத்த கறி பானையை வைக்கச் சென்றபோது, கைதி அடுப்பில் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தினால் கைதியின் முதுகு மற்றும் வெளிப் பகுதிகளில் தீக்காயங்களுக்கு உள்ளாகி, தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தங்காலை வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கைதி கடந்த (6) உயிரிழந்துள்ளார்.