குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி!

Date:

நடுத்தர வருமானம் பெறும் நாடான இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டின் தனிநபர் வருமானம் நாளாந்தம் குறைந்து வருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உலக நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக பிரகடனப்படுத்துவதற்கான குறிப்பிட்ட காலம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்குமாறு ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம்   கேட்டுக்கொண்டனர்.

இலங்கையை நடுத்தர வருமானத்தில் இருந்து குறைந்த வருமான நிலைக்குத் தரம் இறக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல புனவர்தன இன்று காலை வாராந்த அமைச்சரவை மாநாட்டில் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி அலுவலகம் உடனடியாக திருத்தியமைத்தமை அமைச்சரவைக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விரிசலைக் காட்டுவதாகத் தெரிகிறது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...