கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 290 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன,தெரிவித்துள்ளார்
முன்னதாக மொத்த சந்தையில் 1 கிலோ கோதுமை மா ரூ. 375க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் மொத்த விலை சந்தைக்கு வெளியிடப்பட்டதாக நிஹால் செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.