கோதுமை மா விலை அதிகரிப்பு?

Date:

கோதுமை மா உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கோதுமை மா விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அமுலுக்கு வந்துள்ளதால், கோதுமை மாவின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கோதுமை மாவின் புதிய விலை தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகார சபையுடனான இந்த வார கலந்துரையாடலில், கோதுமை மா விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள், நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் என வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...