‘ஒரே இரத்தம்’ என்று கருப்பொருளின் கீழ் இரத்த தான முகாம் இன்று (23) காலை 09 மணி முதல் நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரையில் நடைபெறுகின்றது.
நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரை, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம், திஹாரிய மற்றும் கஹடோவிட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள், வயங்கொடை புனித கன்னி மேரி தேவாலயம் என்பன இந்த இரத்த தான தொண்டு நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த பிரதேசத்தில் முன்மாதிரிமிக்க சமூக இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக்கூடிய வகையில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.