டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் 54.20 டொலருக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க் தீர்மானித்துள்ளார்.
சமூக வலைதளமான டுவிட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க் முன்னர் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து 44 பில்லியன் டொலருக்கு அதனை அவருக்கு விற்பதற்கு டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரலில் முடிவு செய்திருந்தது.
இதற்கிடையில் டுவிட்டரில உள்ள போலிக் கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உட்பட சில விபரங்களைத் தரும்படி டுவிட்டர் நிர்வாகத்தடம் எலான் மஸ்க் கோரியிருந்தார்.
2 மாதங்களாகியும் இந்தத் தகவல்கள் கிடைக்காததனால் டுவிட்டரை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார்.
இதனையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது.
இந்நிலையிலேயே டுவிட்டரின பங்குகளை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்