இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அறிமுகம் செய்யும் வகையில், ‘when The moon split’ என்ற ஆங்கில நூலிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட (සඳ දෙකඩ සඳ) நிலவை பிளந்த நிலவு என்ற நூல் வெளியீட்டு விழா, நேற்று 25ம் திகதி மாலை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விசேட பேச்சாளராக கல்வி அமைச்சின் கொழும்பு மாவட்ட உதவி பணிப்பாளர் கரவில கொட்டுவே தம்ம திலக தேரர் கலந்து கொண்டார்.
பிரபல சிங்கள எழுத்தாளரும் கலைஞரும் மொழிபெயர்ப்பாளருமான சமன் புஸ்ப லியனகே அவர்களினால் எழுதப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவில்
தொடர்ந்து, ‘நியூஸ் நவ்’ (NewsNow.lk) இணையத்தளம் தொடர்பான விசேட காணொளி சபையோருக்கு காண்பிக்கப்பட்டது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பஹன மீடியாவின் ஆலோசகருமான கலாநிதி தம்மிக்க ஜயசிங்க பஹன மீடியா பிரைவெட் லிமிடெட்டின் மற்றொரு திட்டமதான ‘பஹன அகடமி’ பற்றிய அறிமுக உரையை தொடர்ந்து வழங்கினார்.
இந் நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார தினைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் தேசிய சமாதான சபையின் திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூர்ஆமித், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்.நவ்பர்,அஷ்.தாஸிம் முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ் என்.எம். அமீன், முன்னாள் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட அதிகாரி.எம்.எச்.எம்.ஹசன், சபுமல் இன்டஸ்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் கமால்டீன், Diepor House உரிமையாளர்.எம்.ஆர்.இம்ரான், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான நியாஸ், சாபி ரஹீம் உட்பட சிங்கள மொழி பேசும் சகோதரர்களும் ஏராளமான புத்திஜீவிகளும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
பிரபல ஊடகவியலாளர் ஜாவித் முனவ்வர் மற்றும் ஊடகவியலாளர் லக்மினி நதீஷா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வின் போது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் கூறிய கருத்துக்கள் அடங்கிய சிறு நூலும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.