திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

Date:

திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் – 2022 (Open International Karate Championship) போட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

International Martial arts Association இலங்கை கிளையின் தலைவர் பிரதம போதனாசிரியர் முகம்மத் இக்பால் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

Open International Karate Championship ஜுனியர் பிரிவில் காத்தா, குமிதே போட்டியில் எம். ஆர்.எம்.ரெஸா மற்றும் எம்.எஸ்.எம்.ஜன்னத் ஹுல் ஆகியோர் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பல்கலைக்கழக உபவேந்தரின் பிரதிநிதியாக கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில், பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபைத் தவிசாளர் பேராசிரியர் ஏ. ஜவ்பர் மற்றும் விளையாட்டு ஆலோசனை சபை உறுப்பினர்களான விரிவுரையாளர்கள், விடுதிப் பணிப்பாளர் யூ.எல். மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...