தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுவிப்பு!

Date:

(File Photo)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் தண்டனை அனுபவித்து வரும்  சிறைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதில் நான்கு கைதிகள், கடந்த  வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர், மேலும் மூன்று பேர் நாளை சிறையிலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பின்னர்  பல்வேறு சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக கடுமையான சிறைவாசங்களை அனுபவித்து வருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  தெரிவித்தார்.
நாளை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக இந்த நல்லெண்ணச் சைகை மேற்கொள்ளப்பட்டது.
விடுவிக்கப்பட்ட பெரும்பாலான கைதிகள் நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் கொண்டாட்டங்களுக்காக ஒன்றிணைவார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மூன்று கைதிகளின் விடுதலையில்  சிறிது காலதாமதம் ஏற்பட்டது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தங்களின் தண்டனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தனர்.

அந்த மேல்முறையீடுகள் திரும்பப் பெறப்பட்டவுடன், அவர்கள்  நாளைக்குள் விடுவிக்கப்படுவார்கள். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...