இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு இந்தியா பதிலடி!

Date:

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

ராஞ்சி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டன் மார்கிரம் 79 ஓட்டங்களையும் ரீஸா ஹென்ரிக்ஸ் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹமட், குல்தீப் யாதவ் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 279 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 45.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களையும் இசான் கிசான் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், போர்ச்சுன், வெய்ன் பார்னெல் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 111 பந்துகளில் 15 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் தெரிவுசெய்யப்பட்டார்.

Popular

More like this
Related

எலிக்காய்ச்சலை தடுக்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய...

5 ஆவது மீளாய்வு குறித்து இலங்கையுடன் IMF பணியாளர் மட்ட ஒப்பந்தம்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் 4 ஆண்டு நீட்டிக்கப்பட்ட...

இஸ்ரேல் – ஹமாஸ் முதற்கட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டது: பணயக் கைதிகள் விடுவிப்பிற்கு ஹமாஸ் இணக்கம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான முதற்கட்ட போர்...

கட்டுரை: ஹமாஸின் சாணக்கியம்: முஸ்லிம்கள் தெரிய வேண்டியது என்ன?

அஹ்மத் அல்-ரஷீத் அல்ஜஸீராவிலிருந்து.. அரசியல் என்பது சாத்தியங்களின் கலை, கனவுகளின் கலை அல்ல என்று...