17 பல்கலைக்கழகங்களில் மனித உரிமை மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களின் பகிடி வதைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்தபோதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஸ்தாபிக்கப்படும் மத்திய நிலையம் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் செயற்படக்கூடிய சூழலை உருவாக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தற்போதுள்ள சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பதே பரிந்துரை. புதிய சித்திரவதைகள் தமக்கு நேர்ந்தன என்ற குற்றச்சாட்டை முன்வைக்க அவர்கள் பயப்படுகின்றார்கள், கல்வியைத் தொடர முன்வரும் பிள்ளைகளை இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி அரச புலமைப்பரிசில் மூலம் கல்வி கற்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.