பாண் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்களின் நிபந்தனைகள்!

Date:

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான ப்ரீமா மற்றும் செரண்டிப் மாவின் விலையை குறைத்தால், பாண் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை குறைக்காததால், அவர்களாலும் விலையை குறைக்க முடியாது என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன  தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையை 85 ரூபாவினால் குறைக்க அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 375 ரூபாவாக இருந்தது. விலை குறைப்புடன், கோதுமை மாவின் புதிய மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 290 ரூபாவாகும்.

எனினும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில்  சிறிய மற்றும் நடுத்தர பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அதன் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...