பொருளாதார சிக்கலால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை!

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த விடயத்தை சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

​​பாடசாலை ஆசிரியர்களை உள்ளடக்கிய கணக்கெடுப்பின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து சிரமம், பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை போன்ற காரணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைக்கு வரும் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

பல தரப்புகளின் தகவல்களுடன் நாட்டின் தற்போதைய கல்வி நிலை குறித்து சமூகத்திற்கு தெரிவிக்க இந்த கணக்கெடுப்பின் தகவல்கள் பயன்படும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...