உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளது.
கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
ஒருபுறம் ரஷ்யாவின் மோசமான இராணுவ செயற்பாடுகள் இரண்டு தசாப்த கால
ரஷ்யாவின் கொடிய ஆதிக்கத்தில் இருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ள
மத்திய ஆசிய நாடுகளுக்கு வழியமைத்துள்ளது.
மறுபுறத்தில் ரஷ்யாவில் இருந்து கட்டாயமாகத் தப்பி ஓட வேண்டிய நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தமது நிபுணத்துவ ஆற்றல்களுடன் இந்த நாடுகளுக்குள் பிரவேசித்துள்ளனர்.
இது மத்திய ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது
முன்னாள் சோவியத் யூனியனும் அதன் பிறகு ரஷ்யாவும் மத்திய ஆசிய பிராந்திய
நாடுகளின் மக்களை போதிய படிப்பறிவு அற்றவர்களாக்கி தமது கொடிய பிடிக்குள் நசுக்கி வைத்திருந்தனர்.
மத்திய கிழக்கில் தமக்குத் தேவையான சர்வாதிகாரிகளைப் பதவியில் அமர்த்தி அவர்கள் ஊடாக அந்தப் பிரதேச மக்களை அமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமம்
பிரான்ஸும் எப்படி தமது பிடிக்குள் வைத்திருந்தனவோ அதேபோன்ற நிலை தான் இந்தப் பகுதியிலும் காணப்பட்டது.
புறூஸ் பென்னியர் என்ற பத்தி எழுத்தாளர் இது பற்றிக் குறிப்பிடுகையில் ‘இவ்வாண்டு பெப்பரவரி மாத பிற்பகுதியில் உக்ரேன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் புவிசார் அரசியல் மேல் தட்டுக்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
உலகம் முழுவதும் பல நாடுகளில் இதன் அதிர்வலைகளை உணரவும் முடிகின்றது’ என்று தெரிவித்துள்ளார்.
19ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய நாடுகளை ரஷ்யா தனது காலணித்துவத்தின் கீழ்
கொண்டு வந்தது முதல் அந்த நாடுகள் ரஷ்யாவின் பிடியில் கட்டுண்டு இருந்தன.
ஆனால் சர்வதேச சமூக அரங்கில் ரஷ்யா புறந்தள்ளப்பட்டு வந்த நிலை அதிகரித்ததன் காரணமாக மத்திய ஆசிய நாடுகளுக்கு வேறு வெளிநாட்டு பங்காளர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சுமார் 200 வருடங்களுக்கு மேலாக ரஷ்யாவையே பூகோள சக்தியாக மத்திய ஆசிய
நாடுகள் பார்த்து வந்தன.
தேவை ஏற்பட்டால் பலவந்தமாகக் கூட தனது சக்தியை இந்தப் பிராந்தியத்தில் திணிக்கக் கூடிய ஆற்றல் மிக்க நாடாக ரஷ்யாவை அவர்கள் கருதி வந்தனர்.
ரஷ்யா உக்ரேனில் தனது படையெடுப்பை ஆரம்பித்தது முதல் நூற்றுக்கணக்கான ரஷ்ய பிரஜைகள் மத்திய ஆசிய பிராந்தியத்துக்குள் வருகை தந்துள்ளனர்.
அவர்களுள் பெரும்பாலானவர்கள் வேறு தூர நாடுகளை நோக்கியும் பயணிக்கின்றனர்.
மத்திய ஆசிய நாடுகள் எல்லாவற்றினதும் பிரதான வர்த்தகப் பங்காளியாக ரஷ்யாவே காணப்படுகின்றது.
மேற்குலக நாடுகளுடனான மத்திய ஆசிய பிராந்தியத்தின் வர்த்தகத்தில் பெருமளவு ரஷ்யா ஊடாகவே இடம்பெறுகின்றது.
மத்திய ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நாடாகவும் ரஷ்யாவே காணப்பட்டது. ஆனால் உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தின் மந்தமான செயற்பாடுகள் மத்திய ஆசிய பிராந்தியத்தை பாதுகாக்கக் கூடிய ரஷ்ய இராணுவத்தின் வல்லமையை கேள்விக்கு ஆளாக்கி உள்ளது.
மத்திய ஆசிய நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாகவும் மிகவும் கஷ்டமான விடயமாகவும் காணப்படுவது பாதுகாப்பு இடைவெளியே ஆகும்.
கடந்த தசாப்த காலத்தில் மத்திய ஆசிய நாடுகள் தமது ஆயுத கொள்வனவுக்கு பல்வேறு வழிகளை நாடி உள்ளன.
மத்திய ஆசிய நாடுகளுக்கு மிகப் பெரிய சவாலாகவும் மிகவும் கஷ்டமான விடயமாகவும் காணப்படுவது பாதுகாப்பு இடைவெளியே ஆகும்.
கடந்த தசாப்த காலத்தில் மத்திய ஆசிய நாடுகள் தமது ஆயுத கொள்வனவுக்கு பல்வேறு வழிகளை நாடி உள்ளன.
துருக்கி மற்றும் சவூதி அரேபியாவுடன் அந்த நாடுகள் மிக நெருக்கமான உறவுகளை
ஆரம்பித்துள்ளன.
இன்னும் பல நாடுகளின் தலைவர்களும் இந்தப் பிராந்தியத்துக்கு
அவ்வப்போது விஜயம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மத்திய ஆசியாவில் துருக்மனிஸ்தானில் தான் இஸ்லாம் முதன் முதலாகப் பிரவேசித்தது.
இந்தப் பகுதியின் கராக்குல் பாலைவனத்தின் பெரும் பகுதியை தனது ஆட்சியின் கீழ்
வைத்திருந்த தஸ்மானிய பேரரசை அரபு முஸ்லிம்கள் வெற்றி கொண்டதன் மூலம் இது நடந்தது.
இறைதூதுர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணித்து 19 வருடங்களின் பின் கி.பி 651ல் முஸ்லிம்கள் புராதன நகரமான மார்வ் நகரைக் கைப்பறியதன் மூலம் தமது படையெடப்பு வெற்றியைப் பூர்த்தி செய்தனர்.
இந்தக் காலப்பகுதியில் துருக்மனிஸ்தானில் வாழ்ந்தவர்கள் துருக்கி இனத்தவர்கள் அல்ல. அப்போது பாரசீக மக்களே அங்கு பெரும்பாலும் காணப்பட்டனர்.
அவர்கள் மிக விரைவாக இஸ்லாத்தை தழுவி ரஷீஉத்தீன் கிலாபத்துக்கு விசுவாசம் மிக்கவர்களாக மாறினர்.
மார்வ் நகருக்கு விஜயம் செய்த சீன வர்த்தகர்கள் அங்கு அரபியர்களும் பாரசீகத்தவர்களும் இரண்டறக் கலந்து எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி அந்நியோன்யமாக வாழ்வதை அவதானித்தனர்
சிறிது காலம் முஸ்லிம்கள் அமுதர்யா நிதிக்கு அப்பால் தமது எல்லைக்குப் பின்னால்
வாழ்ந்தனர்.
அங்கே அவர்கள் கண்டது அதுவரை தமக்கு பழக்கம் இல்லாத ஒன்று. அங்கு நாடோடி துருக்கியர்கள் பெரும்பாலாக வாழ்ந்தனர். அங்கே பரந்த புல்வெளிகளும்,
மகத்தான மலைத் தொடர்களும், உறை பனியையும் அவர்கள் கண்டனர்.
பனிஉறைந்த பாலைவனங்களையும் அவர்கள் கண்டனர். மத்திய ஆசிய பிராந்தியத்தில் இருந்து தான் பெரும்பாலான இஸ்லாமிய விஞ்ஞானிகளும்,
கல்விமான்களும் தத்துவ ஞானிகளும் தோற்றம் பெற்றுள்ளனர்.
திம்ரோத் சாம்ராஜ்ஜியம், முகலாய சாம்ராஜ்ஜியம் என்பன உட்பட மிகப்பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்கள் இந்தப் பிரதேசத்தில் இருந்து தான் தோற்றம் பெற்றன.
மொரிஸ் ரொஸாபி என்ற எழுத்தாளரின் கருத்துப்படி இந்தப் பிராந்தியம் மிக அண்மைக்காலம் வரை வெளிநாட்டவர்களுக்கு மூடப்பட்டே காணப்பட்டது.
காரணம் அதன் மேற்குப் பகுதி சோவியத் கட்டுப்பாட்டிலும், கிழக்குப் பகுதி சீனாவின் கட்டப்பாட்டிலுமே காணப்பட்டன.
இதனிடையே பட்டுப் பாதையை அரபு மற்றும் பாரசீக வர்த்தகர்கள் கடந்து வந்ததால்
மத்திய ஆசியாவில் இஸ்லாம் மிக துரித கதியில் பரவத் தொடங்கியது. அவர்கள் உள்ளுர் மக்களை மதம் மாற்றினர்.
சமர்காந்த், புக்ஹாரா ஆகிய நகரங்களில் பள்ளிகளும் கட்டப்பட்டன.
இந்நிலையில் இந்தியாவைப் பாதுகாக்க குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து இந்தியாவைப்
பாதுகாக்க பிரிட்டன் நேபாள், பூட்டான், சிக்கிம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக
விரிவான ஒரு தடுப்பு வலையத்தை ஏற்படுத்த முயன்றது.
மேலும் அதை அவர்கள் திபெத் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை விரிவு படுத்தவும் முயன்றனர். இந்த செயற்பாடுகள் பிற்காலத்தில் பெரும் விளையாட்டுக்கள் என வரலாற்றியலாளர்களால் வர்ணிக்கப்பட்டன.
இவற்றின் விளைவாக மத்திய ஆசியாவில் உள்ள முஸ்லிம் சனத்தொகை 19ம்
நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளால் சுற்றி
வளைக்கப்பட்ட ஒரு சனததொகையாயிற்று.
இஸ்லாத்தை ஒரு மார்க்கம் என்ற ரீதியில் இந்த வெளிநாட்டு சக்திகள் தாக்கத் தொடங்கின. இங்கு காணப்பட்ட உள் கட்டமைப்பு,நாடோடி வாழ்க்கை முறை என்பனவும் தாக்கப்பட்டன.
மத்திய ஆசியாவில் இஸ்லாத்தின் வரலாறு மிகவும் நீளமானது. இந்த பிரதேசத்தைக் கைப்பற்ற பல்வேறு தரப்பினரும் மோதிக் கொண்டதால் மீண்டும் மீண்டும் அது ஒரு யுத்த பூமியாக மாறியது.
சீனா, பாரசீகம், துருக்கி ஆகிய பேரரசுகளிடமிருந்து தமது கிலாபத் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் தக்க வைத்துக் கொள்ளவும் முஸ்லிம்கள் பெரும்
போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
ஆனால் இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் மத்திய ஆசியாவில் இஸ்லாம் மிக வேகமாகப் பரவியது.
இன்று அந்த பிரதேசத்தில் செயல்முறையில் உள்ள மார்க்கங்களில் மிகவும் பிரதானமானதாகவும் அதிகளவான மக்களால் பின்பற்றப் படுவதாகவும் இஸ்லாம் திகழ்கின்றது.
20 மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் மத்திய ஆசியாவில் உள்ள நிலைமைகள் பெரும்பாலும் 18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அங்கு காணப்பட்ட நிலைமைகளை ஒத்ததாகவே உள்ளன.
1923ம் ஆண்டுகளில் இந்த நாடுகள் பற்றி பெரும்பாலும் பேசப்பட்ட விடயங்களில் இங்கு 90 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்பது பிரதான அம்சமாக இருந்தது.
முன்னாள் வியத் குடியரசாக இருந்த இந்த நாடுகள் ரஷ்யா தனது பெரும் பலப்பிரயோகத்தோடு அவர்கள் மீது திணிக்க முயன்ற நாத்திகவாதக் கொள்கைகளையும் மீறி தமது இஸ்லாமிய தனித்துவத்தை தக்க வைத்துக் கொண்டமை முற்றிலும் நம்ப முடியாத ஒன்றாகவும் உள்ளது.
குறிப்பாக 1920களில் இஸ்லாத்தை இங்கிருந்து அழித்து விட்டு அதற்குப் பதிலாக
தங்களால் உருவாக்கப்பட்ட, தங்களது அரச கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள ஒரு வகை
இஸ்லாத்தை இந்த மக்கள் மீது திணிக்க ரஷ்யா பெரும் பிரயத்தனங்களை எடுத்தது.
எவ்வாறேனும் அவற்றை எல்லாம் முறியடித்து இன்றைய நவீன ஐந்து மத்திய ஆசியக்
குடியரசு நாடுகளில் இஸ்லாம் இன்னமும் பிரதான மார்க்கமாக நிலைத்து நிற்கின்றது.
1920களின் ஆரம்பத்தில் ரஷ்யா மத்திய ஆசிய பிராந்தியத்தில் இஸ்லாத்துக்கு தடை
விதித்தது. அங்கு அரபியில் எழுதப்பட்ட புத்தகங்கள் யாவும் தீக்கிரையாக்கப்பட்டன.
முஸ்லிம்கள் எந்த அலுவலகங்களிலும் எவ்வித பதவிகளும் வகிக்க அனுமதிக்கப்படவில்லை. குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் விசாரணை மன்றங்கள் யாவும் மூடப்பட்டன. முஸ்லிம்கள் தமது வழியாடுகளில் ஈடுபடுவது கூட முற்றிலும் முடியாத காரியமாயிற்று.
எவ்வாறாயினும் 1990ல். முன்னாள் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் கிடைத்த
சுதந்திரத்துக்குப் பின் இஸ்லாம் பற்றிய தேவையும் தேடுதலும் இங்கு மீண்டும்
அதிகரித்தன. மக்கள் ஆர்வத்தோடு அதில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய ரீதியான அரசியல் குழுக்களின் செயற்பாடுகளும் அதிகரிக்கத் தொடங்கின. புதிய குடியரசுகளிலும் அவற்றின் அரசுகளிலும் காணப்பட்ட மதச்சார்பற்ற நிலைமைக்கு அவை சவாலாக மாறின.
இந்த இஸ்லாமிய ரீதியான அரசியலின் ஆரம்ப கட்ட வெளிப்பாடுகள் மீது பிரயோகிக்கப்பட்ட கடுமையான அடக்குமுறைகள் அங்கு தீவிரவாதம், பயங்கரவாதம், மற்றும் வன்முறை கும்பல்களின் தோற்றத்துக்கும் வழியமைத்துள்ளன.