மறைந்த தேரரின் இறுதிக் கிரியைகள் அரச அனுசரணையுடன் மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை!

Date:

மறைந்த அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாவட்ட பிரதான சங்க தலைவர் கலாநிதி   பல்லேகம ஸ்ரீநிவாச  தேரரின் இறுதிக்கிரியைகளை பூரண அரச அனுசரணையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர்  மஹிபால ஹேரத் ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டிலுள்ள மகா சங்கத்தினரிடையே முக்கிய பங்காற்றிய வணக்கத்திற்குரிய பல்லேகம ஸ்ரீநிவாச  தேரர், ரஜரட்ட மக்கள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரினதும் நலனுக்காக தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்த சங்கப் பிதாவாகும்.

தற்போது தகனக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை 22ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...