மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்டவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!

Date:

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினரால் வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசியமான பொருட்கள் இன்று (09) பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களால் இனிப்புக்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி நிர்வாகத்தினர், கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளை தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ், அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் உட்பட பௌத்த மதகுருவும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டிலும் முஅஸ்கர் நிர்வாகத்தினரால் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...