அடுத்த பண்டிகைக் காலத்தில் நாடு கணிசமான அளவு முட்டை பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் தற்போது போதுமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்று சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் முட்டை மீதான அரசின் விலை வரம்புகளின் பின்விளைவுகளால் இந்த அவலநிலை ஏற்பட்டது என்றார்.
விலைக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக, முட்டை உற்பத்தியாளர்களில் ஏறக்குறைய பாதி பேர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர், பலர் இறைச்சிக்காக தங்கள் கோழிகளை விற்கின்றனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.