நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி தின வைபவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் , முன்னாள் ஜனாதிபதி அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் சென்றிருந்தார்.
அத்தோடு பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்கி உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.