மேல் மாகாணத்தில் நாளாந்தம் வெளியேற்றப்படும் சமைத்த உணவின் அளவு சுமார் 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுநோய்க்கு முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இக்காலப்பகுதியில் வெளியேற்றப்படும் ஏனைய கழிவுகளும் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளது.
பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்டவற்றை கழிவுகளாக மறுசுழற்சி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை அகற்றுவதில் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.