மேல் மாகாணத்தில் உணவுக் கழிவுகள் 40 வீதத்தால் குறைந்துள்ளது!

Date:

மேல் மாகாணத்தில் நாளாந்தம் வெளியேற்றப்படும் சமைத்த உணவின் அளவு சுமார் 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, ​​இக்காலப்பகுதியில் வெளியேற்றப்படும் ஏனைய கழிவுகளும் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளது.

பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்டவற்றை கழிவுகளாக மறுசுழற்சி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை அகற்றுவதில்  பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...

இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல் நீடிப்பு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது...

புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம்...