2022 / 2023 ஆம் ஆண்டுக்கான 12வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா ஆரம்பம்!

Date:

முப்படை வீரர்களின் விளையாட்டு திறமைகள் வெளிக்கொணரும் நிகழ்வான ‘பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு’ நிகழ்வுகள் நேற்றைய தினம் பனாகொட இராணுவ உள்ளக அரங்கில் விமர்சையாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனெரல் கமால் குணரத்ன கலந்துகொண்டதுடன் பாதுகாப்பு படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு குழு தலைவரும் இலங்கை விமானப்படை தளபதியுமான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன இலங்கை இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளும் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்ட விளையாட்டு வருடாந்த அட்டவணைப்படி முக்கியமான ஒரு விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் இலங்கையினுள் இடம்பெறும் விளையாட்டுகளில் முக்கியமான ஒன்ற பாதுகாப்பு சேவைகள் விளையாட்டின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுபவங்கள் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

முப்படையில் இராணுவப் பணிக்காக இணைக்கப்படும் வீர வீராங்களின் விளையாட்டு திறன்களை இனம்கண்டு அவர்களின் திறன்களை மேன்மைப்படுத்துவதற்காக முப்படை விளையாட்டு சம்மேளனத்தின் மிக பெரும் சேவையாகவும் வெற்றிகரமான விளையாட்டு தொடராக இந்த பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு நிகழ்வுகள் கருத்தில் கொள்ளப்படுகிறது

இந்த பாதுகாப்பு சேவைகள் விளையாட்டின்மூலம் திறன்களை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியில் தாய் நாட்டிற்காக இராணுவப்படை சார்பாக 272 பதக்கமும் இலங்கை விமானப்படை சார்பாக 40 பதக்கமும் இலங்கை கடற்படை சார்பாக 30 பதக்கங்களும் பெற்றுக்கொடுத்துள்ளனர்

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டித்தொடரில் 39 விளையாட்டு பிரிவில் போட்டிகள் 2022 ஒக்டோபர் 26ஆம் திகதி தொடக்கம் 2023 ஒக்டோபர் மாதம் இராண்டாம் வாரம்வரை இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த ஆரம்ப விழாவில் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் உற்பட முப்படை சார் விளையாட்டு வீரவீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...