தற்போதைய அரசாங்கம் டொலர்கள் தேவை என கூறினாலும், டொலர்களை ஈட்டும் சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் போன்ற ஏற்றுமதி துறைகளுக்கு பாரிய வரிகளை விதித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வெல்லவாய தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எந்தவொரு எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வறிய நாகரீகம் மற்றும் மோசமான கலாசாரமாக இருந்த நாட்டை ராஜபக்சக்கள் இன்று உலகில் மிக மோசமான நாடாக மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2019 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் நாட்டில் சுபீட்சத்தை கொண்டு வருவதற்காக ஆரவாரத்துடன் வந்ததாகவும், ஆனால் இறுதியில் சுபீட்சத்தை இழக்கும் நிலைக்கு நாட்டை திவாலாக்கி விட்டதாகவும் எதிர்கட்சி தலைவர் கூறினார்.