இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு: ஜனாதிபதி ரணில் வாழ்த்து

Date:

இங்கிலாந்தின் 57வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரிஷி சுனக்கின் விரிவான அனுபவம் அவரது கடமைகளை நிறைவேற்றும் திறனுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று ஜனாதிபதி வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் இங்கிலாந்தும் பாரம்பரியமான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுனக்கின் தலைமைத்துவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, “இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்த நான் எதிர்நோக்குகிறேன், எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...