இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

Date:

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...