ஈஸ்டர் வழக்கு: 10 வாரங்களுக்கு மைத்திரிக்கு நிம்மதி!

Date:

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கு விசாரணையை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

அதற்குள் மனுதாரர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பாரபட்சமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த தீர்மானம் அறிவிக்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...