உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்-சிம்பாப்வே அணிகள் நேற்று விளையாடின.
இந்நிலையில் தான் இருநாட்டு வீரர்களுக்கும் ‘மிஸ்டர் பீன்’ பெயரை கூறி மோதிக்கொண்ட சம்பவம் ஒரே சமூக ஊடகங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. முதலில் தகுதி சுற்று போட்டிகள் நடந்த நிலையில் தற்போது சூப்பர் 12 சுற்று நடந்து வருகிறது.
இதில் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ‘பி ‘பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், சிம்பாப்வே , நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தான்-சிம்பாப்வே ரசிகர்கள் போட்டிக்கு முன்பாகவே மோதி கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சில வேளைகளில் கிரிக்கெட் போட்டியின்போது இருநாட்டு வீரர்கள் அடித்து கொண்டு பெரிய சண்டையில் ஈடுபட்டது உண்டும். ஆனால் இங்கு அப்படி எதுவும் நடைபெறவில்லை. மாறாக இருநாட்டு வீரர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜிம்பாப்வேக்கு என்னவொரு வெற்றி! வீரர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என்று பதிவிட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பதிவில், எங்களிடம் மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. மீண்டு வரும் பழக்கம் பாகிஸ்தானியர்களிடம் உண்டு. வாழ்த்துக்கள், இன்று உங்கள் அணி நன்றாக விளையாடியது என்று குறிப்பிட்டுள்ளார்.
We may not have the real Mr Bean, but we have real cricketing spirit .. and we Pakistanis have a funny habit of bouncing back 🙂
Mr President: Congratulations. Your team played really well today. 👏 https://t.co/oKhzEvU972
— Shehbaz Sharif (@CMShehbaz) October 27, 2022