களனி, களு, கிங் ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும்!

Date:

நாட்டைச் சூழவுள்ள வெப்பமண்டல ஒன்றிணைந்த வலயத்தின் தாக்கம் காரணமாக தற்போது பெய்து வரும் கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுகங்கையின் மில்லகந்த நீர் மானியின் நீர் மட்டம் பாரிய வெள்ளப்பெருக்கு மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக இன்று அதிகாலை 03:30 மணியளவில் வெளியிடப்பட்ட ஆறுகளின் நீர் மட்டங்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிங் கங்கை, பத்தேகம பிரதேசம் மற்றும் பனடுகம பிரதேசத்தின் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் சற்று வெள்ளப்பெருக்கிற்கு உயர்ந்துள்ளது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...