சிறைக் கைதிகள், குறிப்பாக நீண்டகாலக் கைதிகள் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கவனம் செலுத்தினார்.
அதேநேரம், கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுக்களிடம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதன் பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, புதிய மீளாய்வுக் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போதுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகள், அனுதாபத்துடன் கருத்தில் கொண்டு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திருத்தம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான சட்டமூலங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.