மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது.
அதேநேரம், மாளிகையின் மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை.
இந்த திருத்தப்பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையிலும், பிற விசேட நிகழ்வுகளை நடத்துதற்கு தகுந்த வகையிலும் ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை, இரண்டாவது கட்டத்தின் கீழ், மாளிகையின் தங்குமிடங்கள் மற்றும் அலுவலக அறைகள் புனரமைக்கப்படவுள்ளன.