தபால் ஊழியர்களின் பற்றாக்குறையால் தபால் சேவை நெருக்கடி!

Date:

தபால் ஊழியர்களின் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் கடிதங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​வெற்றிடமாக உள்ள தபால் ஊழியர்களின் எண்ணிக்கை, 2,000 ஆக உள்ளது.

8,600 தபால் ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், தற்போது 6,500 பேர் மட்டுமே கடமையாற்றுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31ம் திகதி, கிட்டத்தட்ட 100 போஸ்ட் மாஸ்டர்கள் ஓய்வு பெறுவார்கள்.

தபால் மாஸ்டர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதால், அஞ்சலகங்களின் பணிகள் கடும் இடையூறுகளுக்கு மத்தியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன்காரணமாக அந்த அலுவலகங்களில் கடித விநியோகம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே தடைகள் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் நிறுவப்பட்ட தபால் நிலையங்களின் எண்ணிக்கை 654 ஆகும். கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மட்டும் பணிபுரியும் தபால் ஊழியர்களின் எண்ணிக்கை 1000ஐ நெருங்குகிறது.

2016 ஆம் ஆண்டு முதல் தபால் ஊழியர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை என சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...