பணவீக்கத்துக்கு இணையாக கொடுப்பனவு கோரும் அரச ஊழியர்கள்!

Date:

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அதன் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க, 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் 80 சதவீதத்தினையும் கடந்துள்ளது..

அண்மையில் இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்ட போதிலும், அதில் எவ்வித ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. எனவே அரசாங்கத்தின் பணவீக்கத்திற்கான கொடுப்பனவு வழங்க வேண்டும்.

பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையினை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்க – ஈரான் போர்: வளைகுடா நாடுகளுக்கு புதிய பாதுகாப்புச் சிந்தனை தேவை- தமிமுன் அன்சாரி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து ஈரான் மீது...

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...