இந்த நாட்டில் எந்தவொரு நபரும் பாராளுமன்றத்தை போன்று பொது சபையையோ அல்லது வேறு எந்த நிறுவனத்தையோ நிறுவ முடியாது என சபாநாயகர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு நிகரான மக்கள் சபையொன்றை ஸ்தாபிக்க தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தால் கூட இவ்வாறான நிறுவனங்களை நிறுவ முடியாது என தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளை மாற்ற முடியும் என்றும் இந்த விவகாரம் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.