முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை!

Date:

முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை கலைக்க  பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 3 ஆம் திகதி முதல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும்  மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான  அதிகாரிகள் தமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் போராடி வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 24 சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கொக்கலாய் வீதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் முந்நூறு முஸ்லிம் மீனவர்களும், மாத்தளன் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும்  மீனவர்களும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று காலை 11 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...