சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.
டீசலை ஏற்றிச் செல்லும் “சுப்பர் ஈஸ்டர்ன்” சரக்குக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு நாளை நவம்பர் 26ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.
இலங்கையின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சீனா 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்கும் என்று தூதரகத்தின் ட்வீட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.