மட்டக்குளி பகுதியில் இன்று (நவம்பர் 28) ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த இருவர் குறித்த நபரை வெட்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கொல்லப்பட்டவர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நாம் வினவிய போது, இதுவரையில் அவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.